காட்பாடியில் ஆசிரியரை குடும்பத்துடன் கட்டிப்போட்டு 15 பவுன் நகை, பணம் கொள்ளை
காட்பாடியில் உதவி தலைமை ஆசிரியரை குடும்பத்துடன் கட்டிப்போட்டு 15 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காட்பாடி,
காட்பாடி செங்குட்டை சி.எம்.ஜான் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 52). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்கச் சென்றனர். நேற்று அதிகாலையில் 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். சத்தம் கேட்டு எழுந்த முத்து மற்றும் அவரது குடும்பத்தினரை மர்ம கும்பல் இரும்பு ராடை காட்டி மிரட்டினர். பின்னர் 4 பேரையும் கயிற்றால் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்தனர்.
இதையடுத்து மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல் போனை கொள்ளை யடித்தனர். பின்னர் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த முத்துவின் மோட்டார் சைக்கிளையும் கொள்ளை யடித்துச் செல்ல முற்பட்ட னர்.
அப்போது முத்து வீட்டின் எதிரே உள்ள தனியார் கம்பெனி வாசலில் கண் காணிப்பு கேமரா பொருத்தப் பட்டுள்ளதை அவர்கள் பார்த்தனர். அந்த கேமராவில் தங்களின் உருவம் பதிவாகி இருக்கலாம் என கருதிய கொள்ளை கும்பல், அந்த நிறுவனத்துக்குள் சென்று கண்காணிப்பு கேமராவையும், கேமரா காட்சிகள் பதிவான கம்ப்யூட்டர் மென் பொருளை யும் திருடிச் சென்றனர்.
இந்த நிலையில் அதிகாலை யில் அந்த வழியாக சென்ற அக்கம் பக்கத்தினர் முத்துவின் வீடு திறந்து கிடப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 4 பேரும் கயிற்றால் கட்டப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை விடுவித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு, கை விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் மர்ம நபர்கள் 4 பேரும் முகமூடி அணியாமல் வந்தனர் என்றும், அவர்கள் வெளியூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்களா?, தமிழக கொள்ளையர்களா? என விசாரணை நடத்தி வருகின்ற னர்.
இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story