மாவட்ட செய்திகள்

சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம் 40-வது நாளாக நீடிப்பு + "||" + Fishermen's Struggle extended to 40th day

சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம் 40-வது நாளாக நீடிப்பு

சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம் 40-வது நாளாக நீடிப்பு
கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் 40-வது நாளாக நீடிப்பதால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. இதனால் ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகளில் மீனவர்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். ஆனால் இந்த துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு ஆழ்கடலில் சில நாட்கள் தங்கி இருந்து மீன்பிடிக்க அனுமதி இல்லை. இதன் காரணமாக சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் நீண்டதூரம் சென்று மீன் பிடிக்காமல் குறைந்த தொலைவிலேயே மீன்பிடித்து வருகின்றனர். மேலும் கட்டுமரம், வள்ளம், நாட்டுப்படகு போன்ற மீனவர்களுக்கு தொழில் பாதிக்கப்படுகிறது.


இதுதொடர்பாக விசைப்படகு மீனவர்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்களும் ஏற்படுகிறது. குறிப்பாக பக்கத்து மாவட்டமான நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கும், சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன.

வேலை நிறுத்தம்

இந்த நிலையில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி முதல் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி கேட்டு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் 40-வது நாளாக நீடிக்கிறது.

இது குறித்து விசைப்படகு உரிமையாளர் நாஞ்சில் மைக்கேல் கூறுகையில், தற்போது மீன்பிடி தொழில் முடங்கியதால் கோழி தீவன உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அதே போல மீன் எண்ணை தயாரித்தல் மற்றும் மீன் உபபொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. மீன்பிடி தொழில் முடங்கியதால் இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் நேரடியாக சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு சின்னமுட்டம் விசைப்படகுகள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை அருகே அரசு பஸ்-மினி லாரி மோதல்; 2 பேர் படுகாயம்
நெல்லை அருகே அரசு பஸ்-மினி லாரி மோதிக் கொண்டன. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
3. இருதரப்பினர் இடையே மோதல்: போலீசாரை கண்டித்து சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஏலகிரிமலையில் நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. 124 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் கரை திரும்பினர்
சின்னமுட்டத்தில் வேலை நிறுத்தம் முடிந்து 124 நாட்களுக்கு பின்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அவர்களது வலையில் ஏராளமான உயர்ரக மீன்கள் சிக்கியிருந்தன.
5. “இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல்” - டெல்லி தேர்தல் குறித்து பா.ஜனதா வேட்பாளர் “டுவிட்டர்” பதிவால் சர்ச்சை
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல் என டெல்லி தேர்தல் குறித்து பா.ஜனதா வேட்பாளர் வெளியிட்ட “டுவிட்டர்” பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.