தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் பாதாள சாக்கடை குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் பாதாள சாக்கடை குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 30 Nov 2019 4:00 AM IST (Updated: 30 Nov 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. எனவே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 4 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பாதாள சாக்கடை கழிவுநீர் சமுத்திரம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப் படுகிறது. மேலும் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக ஆங்காங்கே குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாநகரில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப்பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இந்த நிலையில் தஞ்சை பாலாஜி நகர் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது. வெளியேறும் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சாலையில் அடிக்கடி இதுபோன்று கழிவு நீர் வெளியேறி வருவதால் சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், வெளியேறும் கழிவுநீர் சாலையின் அருகில் உள்ள வாய்க்காலில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக அடைப்பை சரி செய்து பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வெளியேறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story