காவேரிப்பட்டணத்தில் ரூ.5½ லட்சம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது


காவேரிப்பட்டணத்தில் ரூ.5½ லட்சம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2019 4:15 AM IST (Updated: 5 Dec 2019 10:37 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணத்தில் ரூ.5½ லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காவேரிப்பட்டணம், 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் கிரு‌‌ஷ்ணகிரி - தர்மபுரி சாலையில் போத்தாபுரம் பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிரு‌‌ஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி ஒரு சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது.

போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 60 பெட்டிகளில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5½ லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 60 பெட்டிகளில் இருந்த புகையிலை பொருட்களையும், வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம் வஜ்வர்மன் தாலுகா ராஜ்பேட்டை கிராமத்தை சேர்ந்த சவாய் சிங் (வயது 28), சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த ரமே‌‌ஷ் குமார் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 More update

Next Story