கொலை, வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது


கொலை, வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 10 Dec 2019 4:45 AM IST (Updated: 10 Dec 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கொலை, வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம், 

சேலம் அம்மாபேட்டை பெரியகிணறு தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் கவுதம் (வயது 23). பழனிசெட்டி தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் தீபக் என்கிற அஜித் (23), லட்சுமிநகர் 2-வது கிராசை சேர்ந்தவர் நாகராஜ் மகன் கதிர் என்கிற கதிரேசன் (25). இவர்கள் 3 பேரும் சேர்ந்து கடந்த 27.10.2019 அன்று அம்மாபேட்டை பகுதியில் பட்டாசு வெடித்து உள்ளனர்.

இதில் ஏற்பட்ட தகராறில் அந்த பகுதியை சேர்ந்த அபுபக்கர் என்பவரை கட்டையால் அடித்து கொலை செய்தனர். தொடர்ந்து மறுநாள் அம்மாபேட்டை காமராஜர் நகர் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே அந்த பகுதியை சேர்ந்த சபீர் என்பவரை வழிமறித்து, கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இந்த வழக்குகளில் 3 பேரையும் அம்மாபேட்டை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் பல்வேறு வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்து உள்ளனர். 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் துணை கமி‌‌ஷனர் தங்கதுரை பரிந்துரை செய்தார்.

இதையொட்டி அஜித், கவுதம், கதிரேசன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் சேலம் மத்திய சிறையில் உள்ள 3 பேரிடமும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.

Next Story