அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி குடவாசல் அருகே அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடவாசல்,
குடவாசல் அருகே ஓகையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட கட்டிடத்தில் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தற்போது 807 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் நேற்று குடவாசல் ஓகை ஆற்றுப்பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய கல்லூரியை கட்ட உடனே பணியை தொடங்க வேண்டும். தற்போது உள்ள கல்லூரியில் கழிவறை உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், குடவாசல் தாசில்தார் பரஞ்ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் மாவட்ட கலெக்டரிடமும், உயர் கல்வித்துறை அதிகாரிகளிடமும், தமிழக முதல்-அமைச்சருக்கும் கொண்டு செல்கிறோம் என அவர்கள் கூறினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் குடவாசல்-திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 5 மாணவிகள் உள்பட 15 பேர் மீது குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Tags :
Next Story