உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் முத்தரசன் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று முத்தரசன் கூறினார்.
கோட்டூர்,
கோட்டூரில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள பெரும்பான்மையை கொண்டு, மிருக பலத்துடன் குடியுரிமை சட்ட திருத்தம் செய்துள்ளது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்ட மசோதாவை அறிமுகம் செய்தபோது, சட்ட திருத்தத்தை ரத்து செய்ய மாட்டோம். போராட்டங்களுக்கு அஞ்சமாட்டோம். இது ஒரு கருங்கல் பாறை என்று அமித்ஷா அறிவித்தார். ஆனால் இன்று இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என அமித்ஷா அறிவிப்பதாக தகவல்கள் வருகின்றன. அது உண்மையாக இருக்குமானால், அவரது இந்த அறிவிப்பானது நடைபெற்று வரும் போராட்டங்களை திசை திருப்பும் முயற்சியாகவே அமையும்.
போராட்டங்கள் தொடரும்
எனவே மத்திய அரசு சட்ட திருத்தத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டங்கள் தொடரும். சென்னையில் இன்று (திங்கட்கிழமை) தி.மு.க. தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து, ஜனநாயக வழியில் இந்த சட்டத்தை எதிர்த்து அமைதியாக பேரணி நடத்த போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்த தடையை மீறி லட்சக்கணக்கான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பேரணியில் பங்கேற்பார்கள். பேரணியில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்த யாரேனும் முற்படுவார்களேயானால், முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில், திருவாரூர் மாவட்டம் உள்பட 27 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
பேட்டியின்போது நாகை செல்வராசு எம்.பி., தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story