ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி மர்ம நபருக்கு வலைவீச்சு


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Dec 2019 11:00 PM GMT (Updated: 23 Dec 2019 7:24 PM GMT)

கொரடாச்சேரி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்த அத்திக்கடையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் வங்கியின் அருகிலேயே உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து எந்திரத்தை கடப்பாரை, கத்தி உள்ளிட்டவற்றால் உடைத்துள் ளார். அவரால் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனிடையே அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்த மர்ம நபர் கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு கையில் இருந்த ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

வலைவீச்சு

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் நடந்து சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து கொரடாச்சேரி போலீசாருக்கும், வங்கி மேலாளருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜே‌‌ஷ் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.ஏ.டி.எம். மையத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் துப்பு துலக்கும் பணியும் நடந்தது. ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன் போலீசார் கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story