திருவாரூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10 லட்சத்து 581 வாக்காளர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம்


திருவாரூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10 லட்சத்து 581 வாக்காளர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம்
x
தினத்தந்தி 24 Dec 2019 4:15 AM IST (Updated: 24 Dec 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 10 லட்சத்து 581 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆண்களை விட பெண்களை அதிகமாக உள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 688 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 15 ஆயிரத்து 795 பெண் வாக்காளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 484 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவாரூர்-மன்னார்குடி

மன்னார்குடி சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 121 ஆண் வாக் காளர்கள், 1 லட்சத்து 26 ஆயிரத்து 965 பெண் வாக்காளர்கள் 6 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரத்து 92 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவாரூரில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 423 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 36 ஆயிரத்து 165 பெண் வாக்காளர்கள், 21 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 609 வாக்காளர்கள் உள்ளனர். நன்னிலத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 537 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 27 ஆயிரத்து 855 பெண் வாக்காளர்கள், 4 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 396 பேர் உள்ளனர்.

பொதுமக்கள் பார்வைக்கு...

மாவட்ட அளவில் மொத்தம் 4 லட்சத்து 93 ஆயிரத்து 769 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 6 ஆயிரத்து 780 பெண் வாக்காளர்கள், 32 திருநங்கை வாக்காளர்கள் என 10 லட்சத்து 581 வாக்காளர்கள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் திருவாரூர் மற்றும் மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதேபோல வாக்குச்சாவடி மையங்களில் தொடர்புடைய பாகங்களின் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

பெயர் சேர்க்கலாம்

18 வயது நிறைவடைந்து இது நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், 1.1.2020 அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்களும், அதாவது 1.1.2002 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ பெற்று அதனை பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயதிற்கான ஆதாரம், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகிய வற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அடுத்த மாதம் 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், உதவி கலெக்டர் (திருவாரூர்) ஜெயப்பிரீத்தா, புண்ணியகோட்டி (மன் னார்குடி), தனி தாசில்தார் (தேர்தல்) சொக்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story