குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: தர்மபுரி, அரூரில் முஸ்லிம்கள் கடையடைப்பு


குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: தர்மபுரி, அரூரில் முஸ்லிம்கள் கடையடைப்பு
x
தினத்தந்தி 23 Dec 2019 10:30 PM GMT (Updated: 23 Dec 2019 8:41 PM GMT)

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மபுரி,

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நேற்று தர்மபுரியில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தர்மபுரி டேக்கீஸ் பேட்டை பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் கடைகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் நேற்று தங்கள் கடைகளை அடைத்து குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோல் அரூரில் உள்ள மஜீத் தெரு, கடைவீதி, பாட்சாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் நேற்று கடைகள், வணிக நிறுவனங்களை அடைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Next Story