சேலத்தில் தாயை தாக்கி ரூ.30 லட்சம், 70 பவுன் நகைகள் பறிப்பு மகன்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு


சேலத்தில் தாயை தாக்கி ரூ.30 லட்சம், 70 பவுன் நகைகள் பறிப்பு மகன்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Dec 2019 4:00 AM IST (Updated: 25 Dec 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தாயை தாக்கி 70 பவுன் நகைகள், ரூ.30 லட்சத்தை பறித்து சென்றதாக மகன்கள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவமணி (வயது 62). இவரது கணவர் விஜயன் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன்கள் சரவணன், சுதாகர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் மூதாட்டி தேவமணி மட்டும் தனியாக அவரது வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தேவமணி சேலம் செவ்வாய்பேட்டை போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார்.

நகை, பணம் பறிப்பு

அதில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது தனது மகன்கள் சரவணன், சுதாகர் மற்றும் மருமகள்கள் ஆகிய 4 பேர் வந்தனர். பின்னர் என்னை தாக்கி விட்டு, வீட்டில் பீரோவில் இருந்த 70 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 லட்சம் ஆகியவற்றை பறித்துச்சென்று விட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் சரவணன், சுதாகர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story