ஈரோட்டில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
ஈரோட்டில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் ஈரோடு கருங்கல்பாளையம் ஜானகியம்மாள் லேஅவுட் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்கிற இப்ராகிம் (வயது 27), ஈரோடு காவிரிரோடு ஜின்னாவீதியை சேர்ந்த முகமது அலியின் மகன் சுலைமான் (21), ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த குப்புசாமியின் மகன் மணிகண்டன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 3 பேர் மீதும் ஈரோட்டில் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளது. எனவே கைதான இப்ராகிம், சுலைமான், மணிகண்டன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சி.கதிரவன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
கைதான 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story