வங்கி கொள்ளை பணத்தில் பங்கு கொடுக்கப்பட்டதா? போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு விசாரணைக்கு ஆஜராக சம்மன்
திருச்சி வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் சென்னை போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுக்கு பங்கு கொடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலின்பேரில், 2 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி கொள்ளிடம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
திருச்சி,
திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூரை சேர்ந்த முருகன், சுரேஷ், கணேசன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கொள்ளை கும்பலிடம் போலீசார் விசாரித்தபோது, இவர்கள் கடந்த ஜனவரி மாதம் திருச்சி நெ.1 ேடால்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3½ கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணாநகரில் தொடர்ச்சியாக 17 வீடுகளில் முருகன் கொள்ளையடித்து கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.
ஆனால் அந்த வழக்கில் முருகன் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டு ஜோசப்புக்கு ரூ.10 லட்சத்தை முருகன் கொடுத்ததாகவும், இதேபோல் திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த பணத்தில் ரூ.18 லட்சத்தை சென்னையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு காரில் வைத்து இன்ஸ்ெபக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டு ஜோசப்பிடம் கொடுத்ததாகவும், அது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாகவும் முருகன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர், ஏட்டுக்கு சம்மன்
இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மையா? என விசாரிக்க சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏட்டு ஜோசப் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன், இன்ஸ்ெபக்டர் உள்பட 2 பேருக்கும் சம்மன் அனுப்பி உள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story