கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 3`லிப்டு'கள் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் தகவல்
கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 3 லிப்டுகள் பொருத்தப்பட உள்ளன என சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.
கரூர்,
கரூர் ரெயில் நிலையத்தின் செயல்பாடு உள்ளிட்டவை பற்றி வருகிற 20-ந்தேதி, தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் வருகை தந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அப்போது ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையை கருத்தில் கொண்டு 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணி மேற்கொள்வது, பயணிகளுக்கு உதவிகரமாக பேட்டரி கார் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி கரூர் ரெயில் நிலையத்தில் கடந்த சில வாரங்களாகவே பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தண்டவாளத்தில் ஜல்லி கற்களை கொட்டி புனரமைத்தல், கட்டிடத்தில் சேதமடைந்த பகுதியில் பூச்சு வேலையினை மேற்கொள்ளுதல், ரெயில் நிலையத்தின் முன்புற சாலையில் சீரமைப்பு பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிகாரி ஆய்வு
நேற்று மதியம் சிறப்பு ரெயிலில் கரூருக்கு வருகை தந்த சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ், கரூர் ரெயில் நிலைய பராமரிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெயில் நிலைய வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றின் பயன்பாடு ரெயில் நிலையத்தில் உள்ளதா? பயணிகளுக்கு டிக்கெட் வினியோகம் உள்ளிட்டவை முறையாக நடக்கிறதா? என்பன உள்ளிட்டவை பற்றி கேட்டறிந்தார். மேலும் ரெயில் நிலைய முன் பகுதியில் உள்ள சுவற்றில் ஜல்லிக்கட்டு, சேவல்கட்டு, கோலி விளையாட்டு உள்ளிட்ட தமிழக பாரம்பரிய விளையாட்டுகளை பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஓவியம் வரையப்பட்டு வருகின்றன. இதனையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது கரூர் நிலைய மேலாளர் ராஜராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஒரு நாளைக்கு ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் வருவாய்
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் தெரிவிக்கையில், ஈரோடு, கரூர் வழியாக தென் மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்த 2 ரெயில்களின் இயக்கமானது, சேலம்-நாமக்கல்-கரூர் வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படுவதால் பயணிகளுக்கு பயண நேரம் குறையும். கரூர் ரெயில் நிலைய தண்ணீர் வசதிக்காக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய ரெயில்கள் இயக்கப்படுகிற போது அவை பயன்பாட்டுக்கு வரும். மேலும் பயணிகளின் வசதிக்காக 3 லிப்டுகள் கரூர் ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட உள்ளன. அவை வருகிற ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு வரும். கடந்த 2019-ம் ஆண்டில் டிக்கெட் வினியோகம், சரக்கு போக்குவரத்து மூலம் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் வீதம் சராசரியாக கரூர் ரெயில் நிலையம் வருவாய் ஈட்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story