மாவட்ட செய்திகள்

திருச்சிற்றம்பலம் அருகே வாய்க்காலில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை + "||" + Woman's body found near Daikkal Police are investigating

திருச்சிற்றம்பலம் அருகே வாய்க்காலில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

திருச்சிற்றம்பலம் அருகே வாய்க்காலில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
திருச்சிற்றம்பலம் அருகே வாய்க்காலில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஈச்சன்விடுதி புதுப்பட்டினம் மெயின் வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செருவாவிடுதி வடக்கு கிராம நிர்வாக அதிகாரி நரேந்திரன், திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி தெரியவில்லை.


கொலையா?

இந்த நிலையில் அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி திருச்சிற்றம்பலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. அனுமதியின்றி பேரணி-பொதுக்கூட்டம்: எம்.பி.க்கள் திருமாவளவன், ஜோதிமணி உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
புத்தாநத்தம் பகுதியில் அனுமதியின்றி பேரணி-பொதுக்கூட்டம் நடத்தியதாக எம்.பி.க்கள் திருமாவளவன், ஜோதிமணி உள்பட 3 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 1½ ஆண்டுக்கு பிறகு 4 பேர் கைது இரிடியம் மோசடி காரணமா? போலீசார் விசாரணை
ஜலகண்டாபுரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இரிடியம் மோசடி காரணமாக இந்த கொலை நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3. ஓமலூர் அருகே, உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் லாரி உரிமையாளர் அடித்துக்கொலை? போலீசார் விசாரணை
ஓமலூர் அருகே லாரி உரிமையாளர் மர்மமான முறையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் தேர்தல் முன்விரோதத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்த சிறுவன் கைவிலங்குடன் தப்பி ஓட்டம் போலீசார் வலைவீச்சு
நாகையில், போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்த சிறுவன் கைவிலங்குடன் தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை
திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை