பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையால் பஸ், ரெயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புதுவையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி,
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முந்தைய நாளான 14-ந்தேதி முதல் பொங்கல் விடுமுறை தொடங்குவதாக இருந்தது. அதேநேரத்தில் நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டால் அடுத்த 19-ந்தேதி வரை போகி, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர்தினம், சனி, ஞாயிறு வாரவிடுமுறை என தொடர் விடுமுறை மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கும் நிலை இருந்தது.
இதைத்தொடர்ந்து புதுவை மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை நாளாக கல்வித்துறை அறிவித்தது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக அடுத்த மாதம் 8-ந்தேதியை வேலை நாளாகும்.
இதையடுத்து அடுத்து 20-ந்தேதிதான் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் உற்சாகமடைந்துள்ளனர். புதுவையில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட திட்டமிட்டு நேற்றே தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இதனால் புதுவை பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. பஸ், ரெயில்களில் இருக்கைகள் நிரம்பி வழிந்தன.
Related Tags :
Next Story