சொத்து பிரச்சினையில் தகராறு: தம்பியை கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு தீர்ப்பு


சொத்து பிரச்சினையில் தகராறு: தம்பியை கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 5:14 PM GMT)

தேனியில் சொத்து பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தேனி,

தேனி சிவாஜி நகரை சேர்ந்த மாயாண்டி மனைவி ராஜா மணி (வயது 59). இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் பாண்டியராஜன் என்ற பாண்டியராஜா. ஆட்டோ டிரைவர். 2-வது மகன் தன பாண்டி (31). கடைசி மகன் சுந்தரபாண்டி (27). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மூத்த மகன் பாண்டியராஜனுக்கும் (40), தனபாண்டிக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர் பாக தகராறு ஏற்பட்டது. அப்போது தனபாண்டியை பாண்டியராஜன் தாக் கினார்.

இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் தனபாண்டி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சுந்தர பாண்டி தனது அண்ணன் பாண்டியராஜனின் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டிய ராஜன், சுந்தரபாண்டியை தாக்கினார்.

பின்னர், சுந்தரபாண்டியை அவர் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, பிணத்தை தேனியில் உள்ள மயானத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டார். சுந்தர பாண்டியை காணாமல், அவருடைய தாய் ராஜாமணி, பாண்டியராஜன் வீட்டுக்கு வந்து விசாரித்தபோது, சுந்தர பாண்டிக்கு தீராத நோய் இருந்ததாகவும், அதனால் வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்ததால் உடலை அடக்கம் செய்து விட்டதா கவும் பாண்டிய ராஜன் கூறி உள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த ராஜாமணி தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மயானத்தில் புதைக்கப்பட்ட சுந்தரபாண்டி உடலை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் தோண்டி எடுத்தனர். மயானத் திலேயே பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. இதில், பாண்டிய ராஜன், சுந்தர பாண்டி கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்ததும், தனது தாயிடம் சுந்தரபாண்டி தற்கொலை செய்ததாக கூறி அவர் நாடகமாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்திய தண்டனை சட்டப் பிரிவு 302 (கொலை செய்தல்), 201 (தடயங்களை மறைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.

அரசு தரப்பில் வக்கீல் வெள்ளைச்சாமி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி அப்துல் காதர் நேற்று தீர்ப்பு வழங்கி னார். அதில் பாண்டிய ராஜனுக்கு கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபரா தமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப் பட்டது. தடயங்களை மறைத்த குற்றத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபரா தத்தை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப் பட்டது.

இந்த தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். 7 ஆண்டு சிறை தண்டனையை முதலில் அனுபவிக்க வேண்டும் என்றும், அந்த தண்டனை காலம் முடிந்தபின்னர் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதையடுத்து தண்டனை பெற்ற பாண்டியராஜனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story