பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி,
பர்கூர் அருகே உள்ள பையனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சிகரலப்பள்ளி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பையனூர் கிராமத்தில் உள்ள 28 குடும்பத்திற்கு கடந்த 1989-ல் ஒரு ஏக்கர் 40 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்திற்கு ஒரே பட்டாவாக மட்டுமே வழங்கப்பட்டது. இவற்றை 28 குடும்பத்திற்கு தனித்தனி பட்டாவாக வழங்க வேண்டும் என்று பல முறை மனு அளித்தோம்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதைத் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சர்வேயர் நிலத்தை அளக்க வந்த போது, அந்த நிலத்தை ஆக்கிரமித்திருந்த ஒரு சிலர் மிரட்டி அவரை அனுப்பி விட்டனர். இதனால் இன்று வரை எங்களுக்கு தனிப்பட்டா கிடைக்கவில்லை. எனவே, இந்த நிலத்தை அளந்து அனைவருக்கும் தனிப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story