புதிய வாக்காளர்களை விடுபடாமல் பட்டியலில் சேர்க்க வேண்டும் அதிகாரி பேச்சு


புதிய வாக்காளர்களை விடுபடாமல் பட்டியலில் சேர்க்க வேண்டும் அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 1 Feb 2020 10:45 PM GMT (Updated: 1 Feb 2020 4:58 PM GMT)

புதிய வாக்காளர்களை விடுபடாமல் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அதிகாரி கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் முன்னிலை வகித்தார். வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையருமான சஜ்ஜன் சிங் ஆர். சவான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம் குறித்து பணிகள் நடைபெற்று வருகிறது. இறந்த, இடம் பெயர்ந்த வாக்காளர்களை தகுந்த விசாரணை அடிப்படையில் நீக்க வேண்டும். அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். குறிப்பாக 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினகரன், உதவி கலெக்டர்கள் ஜெயப்பிரீத்தா, ராமச்சந்திரன் மற்றும் அனைத்து தாசில்தார்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.


Next Story