ரூ.18½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


ரூ.18½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Feb 2020 9:30 PM GMT (Updated: 2020-02-03T20:09:14+05:30)

திருச்சி விமான நிலையத்தில் ரூ.18½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

செம்பட்டு,

சிங்கப்பூரிலிருந்து கடந்த 1–ந் தேதி இரவு திருச்சி விமான நிலையத்துக்கு தனியார் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அப்போது சிவகங்கையை சேர்ந்த ராஜீவ்காந்தி(வயது 35) என்பவர் தனது உடைமைக்குள் மறைத்து ரூ.18½ லட்சம் மதிப்பிலான 450 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story