மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து கண்காணிப்பு அலுவலர் ஹரிசுந்தரி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை, நகர்நல மையம், காவேரிப்பட்டணம் அரசு சமுதாய நல மையம் ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சென்னை குடும்ப நல இயக்குனர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் ஹரிசுந்தரி மற்றும் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான அடிப்படை முன்னெச்சரிக்கை தற்காலிக கவசங்கள், கிருமி நாசினி ஆகியவற்றை போதுமான அளவு தயார் நிலையில் வைத்து கொள்ளவேண்டும். சீனாவில் இருந்து இந்த மாவட்டத்திற்கு வந்த நபர்களை முறையாக மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
கலந்தாய்வு கூட்டம்
கொரோனா வைரசின் அறிகுறிகளான காய்ச்சல், சளி, உடல் சோர்வு, இருமல், ஒரு சிலருக்கு மூச்சு திணறல், ஏற்படும் போது நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றான தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு நன்கு கழுவ வேண்டும். இருமும் போதும், தும்பும்போதும், வாய் மற்றும் மூக்கினை கைகுட்டை மூலம் மூடிகொள்ளவேண்டும். இளநீர், கஞ்சி போன்ற நீர் சத்து போன்ற ஆகாரத்தை பருக வேண்டும் என்று கண்காணிப்பு அலுவலர் ஹரிசுந்தரி அறிவுறுத்தினார்.
பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகருடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த ஆய்வின்போது கிருஷ்ணகிரி நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், குடும்ப நல துணை இயக்குனர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story