திருப்பூரில் 2-வது நாளாக இந்து முன்னணியினர் போராட்டம்
திருப்பூரில் 2-வது நாளாக இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர்,
திருப்பூரில் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயங்கரவாதிகள் திருப்பூரில் பதுங்கி இருப்பதாகவும், எனவே பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறும் திருப்பூரை மீட்டெடுக்கவும், இந்த பயங்கரவாதிகளை திருப்பூரில் இருந்து வெளியேற்றக்கோரியும், திருப்பூர் மாநகர இந்து முன்னணி சார்பில், தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி திருப்பூர் புஷ்பா தியேட்டர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் நாமவளி பிரார்த்தனை போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்றும் 2-வது நாளாக கோடி நாமாவளி தொடர் பிரார்த்தனை போராட்டம் தொடர்ந்தது.
இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கி னார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பாளர் பக்தன்ஜி, காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். தொடர் போராட்டத்தில் மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ், மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு வெங்கடேஸ்வரன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்று வருகிறார்கள். போலீசாரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story