கொரோனா வைரஸ்: சீனாவில் இருந்து சேலம் திரும்பிய 108 பேர் தொடர்ந்து கண்காணிப்பு அதிகாரிகள் தகவல்


கொரோனா வைரஸ்: சீனாவில் இருந்து சேலம் திரும்பிய 108 பேர் தொடர்ந்து கண்காணிப்பு அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 9 March 2020 5:30 AM IST (Updated: 9 March 2020 2:36 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சீனாவில் இருந்து சேலம் திரும்பிய 108 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம்,

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பீதியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் சுகாதார குழுவினர் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய பொதுமக்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் சீனாவில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வந்த 108 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு ஒத்துழைப்பு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் யாரேனும் வந்தால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் 12 படுக்கைகள் கொண்ட தனி சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தேவையான மருத்துவக்குழுக்களும், அனைத்து பாதுகாப்பு கருவிகள், உபகரணங்கள், செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்ட அனைத்துவிதமான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதுதவிர, கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் வராமல் தடுக்க, சுகாதாரத்துறை தெரிவித்துள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும், பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அந்த நோயினை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் சுகாதாரத்துறை மேற்கொள்ளும் அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story