திருப்பூரில் மகளிர் தினத்தையொட்டி மாரத்தான்: திரளானவர்கள் பங்கேற்பு


திருப்பூரில் மகளிர் தினத்தையொட்டி மாரத்தான்: திரளானவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 March 2020 10:00 PM GMT (Updated: 2020-03-09T02:38:39+05:30)

திருப்பூரில் மகளிர் தினத்தையொட்டி மாரத்தான் நடைபெற்றன. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர், 

மகளிர் தினத்தையொட்டி திருப்பூரில் நேற்று காலை மாரத்தான் நடைபெற்றது. மகளிர் பாதுகாப்பை வலியுறுத்தி திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் இருந்து வஞ்சிப்பாளையம் வரை மாரத்தான் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுபோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி வீரபாண்டி வரை நடைபெற்றது. கலெக்டர் கொடியசைத்து மாரத்தானை தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மாரத்தானில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் திரளானவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாரத்தான் முடிவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பெண்கள் பலர் தங்கள் முடியை தானமாக வழங்கினார்கள். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Next Story