கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: சுகாதாரத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சுகாதாரத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
சீனாவில் ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களை பலிகொண்ட கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்துள்ளது. இதனால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சில வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கு வரும்போது விமான நிலையத்திலேயே பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
கட்டுப்பாட்டு அறை
சந்தேகப்படும்படியானவர்கள் தனியாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். புதுவையிலும் மார்பக நோய் மருத்துவமனை, ஜிப்மர் ஆஸ்பத்திரி போன்றவற்றில் தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் சுகாதாரத்துறை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 104 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
விழிப்புணர்வு நோட்டீசு
இதற்கிடையே புதுவை வைத்திக்குப்பத்தில் நேற்று நடந்த மாசிமக விழாவில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், சளித்தொல்லை, உடல்வலி, மயக்கம், சோர்வு, தலைவலி, வயிற்றுப்போக்கு, தொண்டைவலி, இருமல், மூச்சு திணறல் ஆகியன இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டது.
இருமும்போதோ, தும்மும்போதோ கைக்குட்டையை உபயோகிக்கவேண்டும், கைகளை அடிக்கடி சோப்பின் மூலம் கழுவவேண்டும், முகக்கவசம் அணியவேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்கவேண்டும், அதிக தண்ணீர், சுத்தமான நன்கு வேகவைத்த உணவை உட்கொள்ள வேண்டும், போதுமான ஓய்வு எடுக்கவேண்டும், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல், கைகுலுக்குதல், எச்சில் துப்புதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டரை ஆலோசிக்காமல் சுயமாக மருந்து உட்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டன.

Related Tags :
Next Story