கொரோனா வைரஸ்: சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பிய தொழிலாளி கைது
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்,
சமீபகாலமாக கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பி வருகின்றனர். இதனால் நாமக்கல் மண்டலத்தில் கோழி மற்றும் முட்டை விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது.
இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நாமக்கல் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கோழிப்பண்ணையாளர்கள் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடமும் புகார் மனு கொடுக்கப்பட்டது.
கோழி இறைச்சி சாப்பிட வேண்டாம்
இந்த நிலையில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் நாமக்கல் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் பெரியசாமி என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு செல்போன் எண்ணில் இருந்து வதந்தி பரப்பப்படுகிறது.
அதில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பிராய்லர் கோழி கடைகளில் உள்ள அனைத்து கோழிகளையும் தாக்கி உள்ளது. தயவு செய்து யாரும் கோழி இறைச்சியை சாப்பிட வேண்டாம். இது மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்து இருந்தார்.
கூலித்தொழிலாளி கைது
இதையடுத்து போலீசார் அந்த செல்போன் எண் யாருடையது என்பதை ஆய்வு செய்தபோது, அது கரூர் மாவட்டம் சென்னிலை ஊனாங்கல்பட்டியை சேர்ந்த பெரியசாமி (வயது47) என்பவரின் செல்போன் எண் என்பதும், அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ஆயில்கடை ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது சமூக வலைத் தளத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி பரப்பியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது பொய்யான தகவல்களை பரப்புதல், இருபிரிவினர் இடையே விரோதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடும் நடவடிக்கை
இது குறித்து நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி கூறியதாவது:-
சமூகவலைத்தளத்தில் தவறான தகவலை பரப்பியதற்காக பெரியசாமி கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் பரப்பிய செய்தி வெறும் வதந்தி என்பதை தெரிவிக்க அவரின் செல்போன் எண் மூலமே மற்றொரு மெஜேசை அனுப்ப ஏற்பாடு செய்து உள்ளோம்.
இதுபோல சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story