அரசியலில் ரஜினியின் முயற்சி வெற்றி பெறாது கே.எஸ்.அழகிரி பேட்டி


அரசியலில் ரஜினியின் முயற்சி வெற்றி பெறாது கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 13 March 2020 12:30 AM GMT (Updated: 12 March 2020 9:10 PM GMT)

அரசியலில் ரஜினியின் முயற்சி வெற்றி பெறாது என கே.எஸ்.அழகிரி கூறினார்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ரஜினி கட்சி தொட ங்குவார் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு அவர் கட்சி தொடங்குவார் என்பதில் நம்பிக்கை இல்லை. ரஜினி நல்ல நடிகர். ஆனால் அவரால் எம்.ஜி.ஆராக முடியாது. அரசியலில் ரஜினியின் முயற்சி வெற்றி பெறாது. அவரது அரசியல் வருகைக்கு நாங்கள் தடையாக இல்லை.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

ஒரே நம்பிக்கை காங்கிரஸ்

சிறுபான்மையினரின் ஒரே நம்பிக்கை காங்கிரஸ் கட்சி. மதச்சார்பற்ற கட்சிகளால் தான் சிறுபான்மையினரை பாதுகாக்க முடியும். மோடி போல யார் வந்தாலும் இந்தியாவில் இருந்து சிறுபான்மையினர் ஒருவரை கூட அப்புறப்படுத்த முடியாது. மோடி மற்றும் அமித்‌ஷாவால் பயமுறுத்த முடியுமே தவிர அவர்களால் வேறு எதையும் செய்ய முடியாது.

அரசியல் இயக்கத்தில் தியாகிகளும் இருப்பார்கள். துரோகிகளும் இருப்பார்கள். சிரமம் ஏற்படும்போது நம்முடன் இருப்பவர்களை, தியாகிகள் என அடையாளம் கண்டு கொள்ளலாம்.

துரோகிகள்

துரோகிகளை அதிகாரத்தில் இல்லாதபோது கண்டறியலாம். தற்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லை. சிந்தியா போன்றவர்களால் அதிகாரம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்

பேட்டியின் போது முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் டி.ஆர்.லோகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் அய்யப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story