மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் + "||" + Coronavirus anti-virus activity: intensity of antiseptic spraying on trains passing through Salem

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சேலம் வழியாக செல்லும் ெரயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சூரமங்கலம்,

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உயிர்கொல்லி நோயாக கருதப்படும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.


தமிழகத்தை பொறுத்த வரையில் வெளிநாடுகளில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்று தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், விமானம் மற்றும் ெரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிக்கும் பணி

அதன்படி சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர் உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் ஜங்‌‌ஷன் ெரயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து ெரயில்களிலும், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ெரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், சேலம் ஜங்‌‌ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இடம், டிக்கெட் வழங்கும் மையம், லிப்ட், பயணிகள் காத்திருக்கும் அறை, சுகாதார வளாகம், சுரங்கபாதை, நடைமேடை, தகவல் மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ெரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே, நேற்று பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற ெரயில்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் நடந்தது.

விழிப்புணர்வு

இதுதவிர, ெரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ெரயில்வே துறை அதிகாரிகளும், ெரயில்வே பாதுகாப்பு போலீசாரும் வினியோகம் செய்து வருகிறார்கள். மேலும், ெரயிலில் பயணம் செய்யும் பயணிகள், முக கவசம் அணிந்து செல்லுமாறு ெரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு: எதிர்க்கட்சி தலைவர்களுடன் மோடி 8-ந் தேதி ஆலோசனை
கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் வருகிற 8-ந் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
2. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சீனாவில் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக சீனாவில் இன்று 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
3. கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடுவோம்: ‘நாளை இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நில்லுங்கள்’ - நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்
கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடும் வகையில், மக்கள் அனைவரும் நாளை இரவு 9 மணிக்கு தங்கள் வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நிற்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
4. கொரோனா பயத்தால் போராட்டம் எதிரொலி: மேலூர் சிறை கைதிகள் மத்திய சிறைக்கு மாற்றம்
மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் கொரோனா பயத்தால் போராட்டம் நடத்தியதால் அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
5. கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் பலியான 95 சதவீதம் பேர் 60 வயதை கடந்தவர்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்
கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் பலியான 95 சதவீதம் பேர் 60 வயதை கடந்தவர்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.