நாகை மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.10 லட்சம் செல்போன்கள் பறிமுதல்


நாகை மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.10 லட்சம் செல்போன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 March 2020 12:00 AM GMT (Updated: 17 March 2020 4:49 PM GMT)

நாகை மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். உரியவர்களிடம், செல்போன்களை போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் நிலுவையில் இருந்த செல்போன் திருட்டு வழக்குகளை தீர்வு காண்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 87 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த செல்போன்களை உரிய நபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஒப்படைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் செல்போன் திருட்டுப்போனதாக வந்த புகார்களில் 150 வழக்குகள் நிலுவையில் இருந்தன. பல ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், செல்போனில் உள்ள ஐ.எம்.ஐ. எண் உதவியுடன் திருட்டுப்போன செல்போன்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

150 வழக்குகள்

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 400-க்கும் மேற்பட்ட செல்போன் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நிலுவையில் இருந்த வழக்குகளில் முதல் கட்டமாக 150 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு ரூ.10 லட்சம் மதிப்பிலான 87 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். சாராயத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story