மதுரையில் இருந்து சென்னை, மும்பை விமான சேவை ரத்து


மதுரையில் இருந்து சென்னை, மும்பை விமான சேவை ரத்து
x
தினத்தந்தி 19 March 2020 5:00 AM IST (Updated: 19 March 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செல்லும் தனியார் விமான சேவை வருகிற 28-ந்தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

மதுரை, 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக, ஏற்கனவே மதுரையில் இருந்து இலங்கை, சிங்கப்பூர் செல்லும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று முதல் மதுரையில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செல்லும் தனியார் விமான சேவை வருகிற 28-ந்தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இதேபோல் மதுரையில் இருந்து காலை 8 மணிக்கு ஐதராபாத் செல்லும் தனியார் விமான சேவையும் 28-ந்தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து இரவு 9.15 மணிக்கு சென்னை செல்லும் ஏர் இந்தியா விமானம் 28-ந் தேதி வரை விமான ேசவையை ஒத்திவைத்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story