கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கையாக புதுவையில் தியேட்டர்கள், வணிக வளாகம், சுற்றுலாதலங்கள் மூடப்பட்டன
கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கையாக புதுவையில் தியேட்டர்கள், வணிக வளாகம், சுற்றுலாதலங்கள் மூடப்பட்டன. மதுபான பார்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி,
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை குழு
இதைத்தொடர்ந்து மத்திய அரசும், புதுவை மாநில அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மத்திய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையிலான குழு இந்த பணிகளை கண்காணித்து வருகிறது.
ஜிப்மர்
அதன்படி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளிட்ட அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளின் கல்வி நடவடிக்கைகளும் (அடுத்த 3 நாட்களில் வரையறுக்கப்பட்ட தேர்வுகள் தவிர) வரும் 31-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. ஜிப்மர் விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதலின் பேரில் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.
தியேட்டர்கள் மூடல்
அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், மற்ற கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், வணிக வளாகங்கள், சண்டே மார்க்கெட், சினிமா தியேட்டர்கள், பியூட்டி பார்லர்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி வகுப்புகள், டிஸ்கொதே, ஜிம், போன்றவை வருகிற 31-ந்தேதி வரை மூடப்பட வேண்டு்ம். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட வர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அரவிந்தர் ஆசிரமத்தில் நடக்கும் தியானம், மைதானத்தில் நடைபெறும் விளையாட்டு பயிற்சிகள், உடற்பயிற்சி வகுப்புகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு்ள்ளன. இளைஞர்களுக்கான வகுப்புகள், மாலைநேர நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய விருந்தினர்கள் யாரும் தங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இதுபோல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வெறிச்சோடின
பள்ளி, கல்லூரிகள் இயங்காததாலும், பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டதாலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி புதுவை நகர வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நேரு வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா பீதி காரணமாக குழந்தைகளை பெற்றோரால் வெளியே அழைத்துச் செல்லமுடியவில்லை. இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மது பார்கள் மூடல்
இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு சார்பில் கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள், வணிக வளாகங்கள் நேற்று (புதன்கிழமை) முதல் மூடப்பட்டன.
மது பார்களை மூடுவது குறித்தும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று முதல் (வியாழக்கிழமை) மதுபார்கள் (மது அருந்தும் இடம்) அனைத்தும் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படுகிறது. அதே நேரத்தில் மொத்த மற்றும் சில்லரை மதுபான கடைகள் செயல்படும்.
மாகி பிராந்தியத்தில் மூதாட்டி ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்கு புனித பயணங்கள் சென்று வந்துள்ள அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாகியில் ஆய்வு
மாகி பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளோம். இதற்காக நானும், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவும் மாகிக்கு செல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
படகு குழாம் மூடப்பட்டது
புதுச்சேரி கலெக்டர் அருண் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் விதமாக பூங்காக்கள், தாவரவியல் பூங்கா, அரவிந்தர் ஆசிரமம், அருங்காட்சியகம், சுண்ணாம்பாறு படகு குழாம் போன்றவையும் வரும் 31-ந்தேதி வரை மூடப்படும்.
புதுவை மாவட்டத்துக்கு உட்பட்ட மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங், பிசியோதெரபி, மற்றும் இதர மருத்துவம் சார்ந்த கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது.
இளங்கலை, முதுகலை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் சேவைகள் கண்காணித்தல், சோதனை பணிகளுக்கு தேவை. எனவே அவர்களை சுகாதாரத்துறை இயக்குனர் தேவையான இடங்களில் பணியில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :
Next Story