கொரோனா வைரஸ் எதிரொலி: ஸ்ரீரங்கம், சமயபுரம், உறையூர் கோவில் இன்று முதல் 31-ந் தேதி வரை மூடல்
கொரோனா வைரஸ் எதிரொலியாக ஸ்ரீரங்கம், சமயபுரம், உறையூர் கோவில் இன்று முதல் 31-ந் தேதி வரை மூடப்படுகிறது.
திருச்சி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இன்று (வெள்ளிக் கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை மூடப்படுகிறது. வருகிற 31-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.
ஆனால் கோவிலில் நடைபெற வேண்டிய பூஜைகள் வழக்கம் போல நடைபெறும் என்று கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்தார்.
இதேபோல் சமயபுரம் மாரியம்மன் கோவிலும் இன்று முதல் 31-ந் தேதி வரை மூடப்படுகிறது.
பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. கோவிலில் 6 கால பூஜைகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தற்போது பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. வருகிற ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருந்த 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறையூர் வெக்காளியம்மன்
இதேபோல உறையூர் வெக்காளியம்மன் கோவில் இன்று காலை 8 மணி முதல் வருகிற 31-ந் தேதி வரை மூடப்படுகிறது.
கோவிலில் ஆகம விதிகளின் படி பூஜைகள் மட்டும் நடைபெறும் எனவும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது எனவும், இன்று நடைபெற இருந்த பூச்சொரிதல் விழா மற்றொரு நாளில் நடத்தப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதே போல் மலைக் கோட்டை மாணிக்க விநாயகர் கோவில், தாயுமான சுவாமி கோவில், உச்சிப்பிள்ளையார் ஆகிய கோவில்கள் இன்று முதல் 31-ந்தேதி வரை மூடப்படுகிறது.

Related Tags :
Next Story