கொரோனா தாக்கம் எதிரொலி: மாகியில் நாராயணசாமி ஆய்வு


கொரோனா தாக்கம் எதிரொலி: மாகியில் நாராயணசாமி ஆய்வு
x
தினத்தந்தி 20 March 2020 5:17 AM IST (Updated: 20 March 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தாக்கம் எதிரொலியாக மாகி பிராந்தியத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.

மாகி,

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் புதுவை மாநிலத்துக்குள்ளும் புகுந்துள்ளது. அதாவது மாநிலத்தின் பிராந்தியமான மாகி பகுதியினை சேர்ந்த மூதாட்டி ஒருவர் துபாய் சென்றுவிட்டு சமீபத்தில் மாகிக்கு திரும்பினார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறியுடன் இருந்த அவர் மாகி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை சோதித்தபோது கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது.

நாராயணசாமி ஆய்வு

இந்த தகவல் புதுவை மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ஆகியோர் நேற்று மாகி சென்றனர்.

மாகி மண்டல நிர்வாக அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின்போது ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வும் உடனிருந்தார்.

அப்போது மாகி பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கினார்கள்.

மருத்துவ உபகரணங்கள்

மேலும் மாகி அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் குறித்தும் அவைகளை வாங்கித்தரவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

Next Story