கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலி: பயணிகள் வருகை குறைவால் காலியாக சென்ற ரெயில்கள்
கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலியாக பயணிகள் வருகை குறைந்து பெரும்பாலான ரெயில்கள் காலியாக சென்றன.
திண்டுக்கல்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுஇடங் களில் மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதையொட்டி பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் நடமாட்டம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் உள்பட பொழுதுபோக்கு இடங்களும் மூடப்பட்டன. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோரை தவிர, மற்றவர்கள் வெளியே வருவதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
காலியாக சென்ற ரெயில்கள்
மேலும் குடும்பத்துடன் வெளியூர் செல்வது, சொந்த ஊருக்கு செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். அதிலும் ரெயில்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் பயணம் செய்வார்கள் என்பதால் பெரும்பாலான நபர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்கின்றனர். இதனால் ரெயில்களில் நாளுக்குநாள் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
இதற்கிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் நேற்று பல ரெயில்களில் பயணிகள் மிகவும் குறைந்த அளவிலேயே பயணித்தனர். இதில் திண்டுக்கல் வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட பல ரெயில்களில் வழக்கத்தை விட மிகவும் குறைவான பயணிகளே பயணித்தனர்.
இதேபோல் சென்னையில் இருந்து வந்த ரெயில்களிலும் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ஒருசில பெட்டிகளில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே பயணித்தனர். இதனால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன.

Related Tags :
Next Story