சிதம்பரம் நடராஜர் கோவில் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
சிதம்பரம் நடராஜர் கோவில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிதம்பரம்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் வருகிற 31-ந் தேதி வரை மூடவேண்டும் என்று சப்-கலெக்டர் விசுமகாஜன் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் கோவிலில் தினந்தோறும் நடைபெற வேண்டிய 6 கால பூஜைகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூடப்பட்ட நடராஜர் கோவிலை சுத்தம் செய்வது என பொது தீட்சிதர்கள் முடிவு செய்தனர். அதன்படி பொது தீட்சிதர்கள் மற்றும் சிதம்பரம் நகராட்சி சார்பில் நடராஜர் கோவில் சுத்தம் செய்யும் பணி நேற்று தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று நடராஜர் சன்னதி, கோவில் உள்பிரகாரம், வெளிபிரகாரம் ஆகிய பகுதிகளில் நகராட்சி மற்றும் கோவில் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதோடு, சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்றது.
அதிகாரி ஆய்வு
இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் நகராட்சி சார்பில் பஸ் நிலையம், தேரோடும் நான்கு வீதிகள், ரெயில்நிலையம், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 2 டேங்கர் லாரிகள் மூலம் தினந்தோறும் 50 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. துப்புரவு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் நகர்ப் புறங்களில் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, சுத்தம் செய்யும் இடங்களில் முறையாக கிருமி நாசினி தெளிக்கவேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் பால்டேவிட்ஸ், கோவில் பொது தீட்சிதர்கள் பாஸ்கர், பட்டு, நகராட்சி கண்காணிப்பாளர் சலீம், சுகாதார மேற்பார்வையாளர்கள் காமராஜ், பாஸ்கர், ராஜாராம், அப்பு, கண்ணன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story