தமிழகம் முழுவதும் திருப்பூரில் இருந்து 1½ லட்சம் முகக்கவசம் வினியோகம்


தமிழகம் முழுவதும் திருப்பூரில் இருந்து 1½ லட்சம் முகக்கவசம் வினியோகம்
x
தினத்தந்தி 27 March 2020 4:00 AM IST (Updated: 27 March 2020 3:51 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் திருப்பூரில் இருந்து 1½ லட்சம் முகக்கவசம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர், 

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் தயாரிக்கும் வகையில் திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதியாளர்களை அழைத்து மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார். 

விருப்பமுள்ள நிறுவனங்கள் முகக்கவசம் தயாரிக்க தெரிவிக்கலாம் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் 3 பெரிய நிறுவனங்கள் நேரடியாக மூலப்பொருட்களை கொள்முதல் செய்து முகக்கவசம் உற்பத்தியை தொடங்கியுள்ளது. 

திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமாரை கண்காணிப்பாளராக நியமித்து, தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக முகக்கவசம் அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினமும் 1½ லட்சம் முகக்கவசம் உற்பத்தி செய்து பல்வேறு மாவட்டங்களுக்கு வினியோகம் ெசய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story