ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் எம்.எல்.ஏ.க்கள் கிருமி நாசினி தெளித்தனர்
ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் எம்.எல்.ஏ.க்கள் கிருமி நாசினி தெளித்து, வீதிகளில் கிருமி நாசினி அடிக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமையில் இந்த பணிகள் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு, சாலைகளில் பிளச்சிங் பவுடர் போடுதல் என்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
நேற்று ஈரோடு மாநகராட்சி 3-வது மண்டலத்துக்கு உள்பட்ட 42-வது வார்டு எஸ்.கே.சி. ரோடு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு கிருமி நாசினி அடிக்கும் எந்திரத்தை வைத்து வீதிகளில் கிருமி நாசினி அடித்து நிகழ்வை தொடங்கி வைத்தனர். சமீபத்தில் எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் ஈரோடு மாநகராட்சிக்கு தங்கள் சொந்த செலவில் 20 கிருமிநாசினி தெளிப்பு எந்திரங்கள் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எந்திரத்தின் மூலம் கிருமி நாசினி தெளித்த எம்.எல்.ஏ.க்கள் அவற்றின் செயல்பாடு குறித்து தூய்மை பணியாளர்களிடம் கேட்டு அறிந்தனர். மேலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து பாதுகாப்பு பணிகளையும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல தலைவர் ரா.மனோகரன், சிந்தாமணி தலைவர் ஜெகதீசன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story