ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் வற்றியதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்


ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் வற்றியதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
x
தினத்தந்தி 25 April 2020 4:30 AM IST (Updated: 25 April 2020 2:51 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்திலேயே பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் வற்றியதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய கண்மாயாக இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய். இந்த கண்மாய் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கண்மாய் மூலம் நகரை சுற்றியுள்ள பல கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும். இதனால் அதனை சுற்றியுள்ள கிணறுகள் மற்றும் வீடுகள் தோறும் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். ஆனால் தற்போது கோடைகாலம் என்பதால் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பெரியகுளம் கண்மாயில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழு கொள்ளளவு வரை தண்ணீர் நிரம்பி இருந்த கண்மாயில் தற்போது பாதிக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. இதனால் கண்மாயை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிடும். கோடைகாலம் என்பதால் வறட்சி ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story