கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 26 April 2020 10:21 PM GMT (Updated: 26 April 2020 10:21 PM GMT)

கள்ளக்குறிச்சியில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் காலை 9.30 மணி அளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள், வெயிலின் தாக்கத்தால் வீடுகளுக்குள் இருக்க முடியாமல் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் காலை 9.30 மணி அளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. திடீரென பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் திருக்கோவிலூர், சங்கராபுரம், சின்னசேலம், மூங்கில்துறைப்பட்டு, தியாகதுருகம் உள்ளிட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

Next Story