தேனியில் முக கவசம் அணியாமல் உலா வரும் மக்கள்
தேனியில் முககவசம் அணியாமல் மக்கள் உலா வருகின்றனர்.
தேனி,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தி உள்ள நிலையில், இந்த வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அடிக்கடி தங்களின் கைகளை சோப்பு அல்லது கை கழுவும் திரவம் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்றும், வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
ஆனாலும், மக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்பவர்கள் மற்றும் வேறு ஏதேனும் பணிகளுக்காக வெளியே செல்லும் மக்கள் பலரும் முக கவசம் அணியாமல் உலா வருவதை பார்க்க முடிகிறது. தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியானது நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ள போதிலும் மக்கள் பலரும் முக கவசம் அணியாமல் சென்று வருகின்றனர்.
அபராதம்
அதுபோல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் சிலரும் முக கவசம் அணியாமல் பணியாற்றி வருகின்றனர். தினமும் பொதுமக்கள், வியாபாரிகள், தன்னார்வலர்களை சந்தித்து பேசும் அலுவலர்கள் சிலரும் முக கவசம் அணியாமல் பணியாற்றி வருகின்றனர்.
அண்டை மாவட்டமான திண்டுக்கல்லில் முக கவசம் அணியாமல் உலா வருபவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தேனியில் முக கவசம் அணியாமல் உலா வருபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

Related Tags :
Next Story