பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள், வேனுடன் பறிமுதல்: 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது
சூளகிரி,
பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில், தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி நோக்கி ஒரு வேன் வேகமாக வந்தது. அப்போது பணியில் இருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி காரை ஓட்டி வந்த நபர் மற்றும் உள்ளே இருந்த மற்றொரு நபரிடம் விசாரித்த போது, அவர்கள் பெங்களூரு மருத்துவமனையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிச் செல்வதாக கூறினார்கள்.
ஆனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டபோது, சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில், கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளபள்ளி பாஞ்சாலியூர் நகரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 38) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும், விற்பனைக்காக இந்த புகையிலை பொருட்களை பெங்களூருவிலிருந்து தனது உறவினர் சதீஷ் (22) என்பவரின் உதவியுடன் காரில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story