கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவை,
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கள ஆய்வுக்குழு மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சரவணவேல்ராஜ், கஜலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத், துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கள ஆய்வுக்குழு அதிகாரிகள் பேசும்போது கூறியதாவது:-
கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு ஊரடங்கு உத்தரவினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இப்பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் காவல்துறையினர் மற்றும் பணிகளில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது முகக்கவசம் அணிய வேண்டும்.
கிருமி நாசினி
முகக்கவசம் அணியாதவர்களை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும், மாநகராட்சியில் உள்ள 12 அம்மா உணவகங்கள் மற்றும் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை தவறாது கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை தவறாது மேற்கொள்ளவேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் காந்திமதி, கலைவாணி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, போலீஸ் துணை சூப்பிரண்டு பிரேமானந்தன், சுகாதார துணை இயக்குனர் அருணா, மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமார் ரத்தினம்,ஏ.ஜே.செந்தில்அரசன், மகேஷ்கனகராஜ், ம.செல்வன், மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story