சென்னையில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா: ஆணையம்பட்டி ஊராட்சி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு


சென்னையில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா: ஆணையம்பட்டி ஊராட்சி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
x
தினத்தந்தி 6 May 2020 4:15 AM IST (Updated: 6 May 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஆணையம்பட்டி ஊராட்சி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கெங்கவல்லி, 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி ஊராட்சி 8-வது வார்டு பகுதியை சேர்ந்த ஒருவர் சென்னையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3-ந் தேதி சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து அந்த பகுதி மக்கள் உள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நபருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி அவர் குடியிருக்கும் பகுதி மற்றும் ஆணையம்பட்டி ஊராட்சி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த ஊருக்குள் செல்லும் அனைத்து எல்லை பகுதிகளும் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு மூடப்பட்டன. இதையடுத்து கிராமத்தில் அவர் சந்தித்த நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Next Story