உளுந்தூர்பேட்டை அருகே தெருத்தெருவாக சென்று கிருமிநாசினி தெளித்த எம்.எல்.ஏ.


உளுந்தூர்பேட்டை அருகே தெருத்தெருவாக சென்று கிருமிநாசினி தெளித்த எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 9 May 2020 10:27 PM GMT (Updated: 9 May 2020 10:27 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே தெருத்தெருவாக சென்று எம்.எல்.ஏ. கிருமிநாசினி தெளித்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உளுந்தூர்பேட்டை,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அரசுடன், மாவட்ட நிர்வாகமும் கைகோர்த்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எம்.எல்.ஏ.வே களம் இறங்கி தெருத்தெருவாக சென்று கிருமிநாசினி தெளித்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

எம்.எல்.ஏ.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரிய மாரனோடை கிராமம். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து இந்த கிராமத்துக்கு வந்த ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு நேற்று பெரியமாரனோடை கிராமத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கிராம மக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா? என்பது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கிருமிநாசினி தெளிப்பு

பின்னர் குமரகுரு எல்.எல்.ஏ., அங்குள்ள மேட்டுத்தெரு, கிழக்கு தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட 14 தெருக்களுக்கு சென்று கிருமிநாசினி தெளித்தார். அப்போது திருநாவலூர் கூட்டுறவு சங்க தலைவர் மாரனோடை சம்பத், நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, அமலநாதன், ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர். எம்.எல்.ஏ.வே கிருமிநாசினி தெளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story