ஈரோட்டில் சமூக இடைவெளியின்றி நடைபயிற்சி செய்த பொதுமக்கள்


ஈரோட்டில் சமூக இடைவெளியின்றி நடைபயிற்சி செய்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 May 2020 4:00 AM IST (Updated: 11 May 2020 2:07 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு, 

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தினந்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானம் மூடப்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு ரெயில்வே காலனி, ஆசிரியர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சிலர் முகக்கவசமும் அணிவது இல்லை. இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து செல்லவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story