ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்வு: ஈரோட்டில் வழக்கம்போல் இயங்க தொடங்கிய வாகனங்கள்


ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்வு: ஈரோட்டில் வழக்கம்போல் இயங்க தொடங்கிய வாகனங்கள்
x
தினத்தந்தி 14 May 2020 4:00 AM IST (Updated: 14 May 2020 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் ஈரோட்டில் வழக்கம்போல் வாகனங்கள் இயங்க தொடங்கியது.

ஈரோடு, 

ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. பெரிய கடைகள், நிறுவனங்களை தவிர பெரும்பாலான சிறிய கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது. இதேபோல் குறைவான தொழிலாளர்கள் உதவியுடன் தனியார் நிறுவனங்களும் செயல்பட தொடங்கி உள்ளன. ஆனால் பஸ் போக்குவரத்து தொடங் கப்படாததால் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சென்று வருகிறார்கள். இதன் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், ஈரோட்டில் வாகனங்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கியதாகவே தெரிகிறது.

ஈரோடு காளைமாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, சுவஸ்திக் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தியபோது அடைக்கப்பட்ட சாலைகள் தற்போதும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வானங்கள் குறுக்கும், நெடுக்குமாக செல்கின்றன. இதேபோல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மேம்பாலமும் அடைக்கப்பட்டு உள்ளது. காலை, மாலை நேரத்திலாவது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மேம்பாலத்தை திறந்து விடலாம் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story