விழுப்புரம் மாவட்டத்தில விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகள் மூடல்
விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகளை அதிகாரிகள் மூடினர்.
விழுப்புரம்,
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளாக டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட சில வகையான தனிக்கடைகளை நோய் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம் நகராட்சி பகுதியில் 15 தெருக்களும், திண்டிவனம் நகராட்சி பகுதியில் 6 தெருக்களும், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் காமராஜ் நகர் பகுதியும், செஞ்சி பேரூராட்சியில் கிருஷ்ணாபுரம் பகுதியும், விக்கிரவாண்டி பேரூராட்சியில் வெங்கடேஸ்வரா நகர் பகுதியும் மற்றும் 88 கிராம ஊராட்சிகளும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. கடைகளில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வருகிறார்களா? என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
அபராதம் வசூலிப்பு
அதுபோல் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.100 அபராதம் வசூலித்தனர். சிலர் முக கவசத்திற்கு பதிலாக கர்சிப் மூலம் முகத்தை மூடிக்கொண்டு வந்தனர். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதால் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் தனிக்கடைகள் திறக்கப்பட்டதால் 1½ மாதத்திற்கு பிறகு விழுப்புரம் நகரின் முக்கிய பகுதிகள் ஆள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் நேருஜி சாலை, எம்.ஜி. சாலை, திரு.வி.க. வீதி, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல்கட்டமாக 15 வகையான கடைகளை திறக்க மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. ஆனால் விழுப்புரம் நகரில் விதிகளை மீறி சிமெண்ட், ஹார்டுவேர் கடைகள், குளிர்சாதன வசதியுடைய ஜவுளிக்கடை, பர்னிச்சர் கடைகள், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள் திறக்கப்பட்டன. உடனே போலீசார் ரோந்து சென்று அந்த கடைகளை மூடும்படி அறிவுறுத்தியதன்பேரில் திறக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அதன் உரிமையாளர்கள், கடைகளை பூட்டிவிட்டு சென்றனர்.

Related Tags :
Next Story