மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது - ஒரே நாளில் 1,600 பேருக்கு பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது. ஒரே நாளில் 1,602 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு புதிய உச்சத்தை தொட்டது.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் ஒரே நாளில் 1,602 பேருக்கு ெதாற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் 1,495 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது தான் இதுநாள் வரையில் அதிகப்பட்சமாக இருந்தது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் நேற்று புதிய உச்சம் தொட்டு உள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 524 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல ஆட்கொல்லி நோய்க்கு மேலும் 44 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,019 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழப்பு 1,000-ஐ கடந்து இருப்பது மாநில மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதேபோல மாநிலத்தில் இதுவரை 6 ஆயிரத்து 59 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.
மும்பையில் 998 பேருக்கு தொற்று
கொரோனா பாதிப்பில் அதிகப்பட்சமாக மும்பையில் ஒரே நாளில் 998 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நகரில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 579 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல மும்பையில் மேலும் 25 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இதுவரை நகரில் 621 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.
இதேபோல ஒரேநாளில் 443 பேர் நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 4 ஆயிரத்து 234 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர்.
படுக்கைகள் அதிகரிப்பு
இந்தநிலையில் மும்ைப மாநகராட்சி கொரோனா நோய் அறிகுறி, நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அமைத்துள்ள சிகிச்சை மையங்களின் படுக்கை எண்ணிக்கையை 22 ஆயிரத்து 941 ஆக அதிகரித்து உள்ளது.
லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கான சிகிச்சை மைய படுக்கை எண்ணிக்கையை 34 ஆயிரத்து 329 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story