விழுப்புரம் மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் மூலம் ரூ.7¾ கோடி நேரில் பட்டுவாடா
விழுப்புரம் மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் மூலம் ரூ.7¾ கோடி நேரில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா தாக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு, பிரதம மந்திரியின் ‘கரீப் கல்யாண்’ திட்டத்தின் மூலம் நிவாரண தொகுப்பை அறிவித்தது.
இதன் மூலம் பல்வேறு மக்களுக்கும் நேரடியாக பண உதவி வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து நிதி உதவிகளும் பயனாளிகளின் வங்கி கணக்கில்தான் வரவு வைக்கப்பட்டுள்ளன. மாநில அரசும், நிவாரண தொகையை வழங்கி உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் தயங்கும்போது அவர்களால் வங்கி, ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுப்பது கனவாகவே இருந்தது. அதிலும் நோய்த்தொற்று இருந்து கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் பொதுவாக வெளியில் செல்லவே முடியாது.
ரூ.7¾ கோடி நேரில் பட்டுவாடா
இந்த சூழலில்தான் தபால் ஊழியர்கள் ஆதார் அடிப்படையில் பணம் வழங்கும் திட்டத்தின் கீழ் மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று பணப்பட்டுவாடா செய்யத் தொடங்கினர். ‘வீட்டு வாசலில் வங்கி சேவை’ என்ற பெயரிலான இந்த சேவை மூலம் தபால் ஊழியர்கள் பணப்பட்டுவாடா செய்கின்றனர். எந்த ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் பணம் எடுக்க முடியும். ஆனால் வாடிக்கையாளர் தனது வங்கி கணக்குடன் ஆதார் எண், செல்போன் எண் இரண்டையும் இணைத்திருக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் 3 அஞ்சலக உட்கோட்டங்கள் உள்ளன. இவற்றில் விழுப்புரம் உட்கோட்டத்தின் மூலம் ஊரடங்கின்போது ரூ.4 கோடியே 68 லட்சத்து 2 ஆயிரத்து 218-க்கு 19,398 பண பரிமாற்றங்களும், திண்டிவனம் உட்கோட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 57 ஆயிரத்து 856 அளவிற்கு 7,095 பணப் பரிமாற்றங்களும், செஞ்சி உட்கோட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்பிற்கு 5,258 பணப்பரிமாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல் புதுச்சேரி தெற்கு உட்கோட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தின் 5 கிளை அஞ்சலகங்கள் வருகின்றன. இந்த உட்கோட்டத்தின் மூலம் ரூ.57 லட்சத்து 92 ஆயிரத்து 390 மதிப்பிற்கு 2,034 பணப் பரிமாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன. மொத்தத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அஞ்சலக ஊழியர்கள் 33,785 பணப்பரிமாற்றங்கள் மூலம் ரூ.7 கோடியே 83 லட்சம் தொகையை பொதுமக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கி உள்ளனர்.
எல்லோரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்போது தமக்கு கிருமித்தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை தவிர்த்துவிட்டு தபால் ஊழியர்கள் மக்களின் அவசர பணத்தேவையை நிறைவேற்றி வருகின்றனர். இவர்களின் சேவைப்பணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Related Tags :
Next Story