திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரேர்னா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை,
சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 101 பேர் வந்து உள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 570 பேர் வந்து உள்ளனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165 ஆக இருந்தது.
இந்த நிலையில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் தண்டராம்பட்டு அருகே உள்ள அயோதியாநகரத்தை சேர்ந்த 22 வயது வாலிபர், மலையனூரை சேர்ந்த 30 வயது பெண், தண்டராம்பட்டை சேர்ந்த 34 வயது வாலிபருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story